ஆணவக் கொலைகளில் ஈடுபடுவோர் மீது எந்தவித தயவு தாட்சண்யமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பாட்ஷா கமிட்டியின் அறிக்கை கிடைத்த பிறகு, ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் விஜய் முடிவு செய்வார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




