கோவையில் பரபரப்பு: யாசகம் கேட்பது போல் வந்து செம்பு பொருட்கள் திருட்டு?

 

 

கோவை சிங்காநல்லூர் பகுதியில் யாசகம் கேட்பது போல் வந்த சில பெண்கள், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து செம்பு கம்பிகள் மற்றும் ஏ.சி. செம்பு குழாய்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது.

 

இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் பெண்கள் வந்தபோது சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஆனால், பெண்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் இல்லை என்பதால் போலீசார் அவர்களை விடுவித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read Previous

சிவகாசி வெடி விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி!

Read Next

கோவை மாணவர் அமுதன் கொலை: இன்று திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular