அரசு அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு: பழனியில் சர்ச்சை!

 

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 

தவெக தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஊராட்சி அலுவலகத்தில் இருந்த கோப்புகளை பார்வையிட்டு, அங்கிருந்த பணிகள் தொடர்பாக ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அப்போது ஊராட்சி அலுவலக செயலாளர் எழுந்து நின்றபடி மணிகண்டனின் கேள்விகளுக்கு பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரசு அலுவலகத்தில் கட்சி நிர்வாகி ஆய்வு மேற்கொண்டது குறித்தும், அதிகாரி அவருக்கு பதிலளித்த விதம் குறித்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

Read Previous

கரூர் விவகாரம்: 31 பேருக்கு அரசுப்பணி வழங்கிய உத்தரவு ரத்து செய்ததற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

Read Next

சென்னையில் வருகிறது ‘ஸ்மார்ட்’ பேருந்து நிழற்குடைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular