“விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது அதிமுக மட்டுமே” – இபிஎஸ்!

 

 

விவசாயிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடும் ஒரே இயக்கமாக அதிமுக மட்டுமே செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், காவிரி டெல்டாவின் முக்கிய பகுதியாக விளங்கும் தஞ்சை மாவட்டம் தற்போது போதிய பாசன நீர் கிடைக்காமல் வறட்சியை எதிர்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

 

மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததே விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என தெரிவித்த இபிஎஸ், இதனால் குறுவை சாகுபடி உள்ளிட்ட விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

மேலும், கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்குரிய காவிரி நீரை போராடிப் பெற்றிருக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

Read Previous

திமுக மாவட்டங்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறதா? பரபரக்கும் தகவல்!

Read Next

“இபிஎஸ் முதலில் உட்கட்சி பிரச்னையை தீர்க்கட்டும்” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular