“ராகுல் காந்தியை தலைவராக ஏற்றது காங்கிரஸுக்கு துயரம்” – ஜெ.பி. நட்டா!

 

 

ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பது அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட துயரம் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ராகுல் காந்தியின் கருத்துகள் நாகரிகமற்றதாக இருப்பதாகவும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் இவ்வாறு செயல்படுவதை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்திற்கு துரதிர்ஷ்டவசமானது என நட்டா குறிப்பிட்டுள்ளார். மேலும், ராகுல் காந்தியின் அணுகுமுறை மற்றும் பேச்சு குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியினரே ராகுல் காந்தியை தங்களது தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பது எவ்வளவு பெரிய துயரம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் ஜெ.பி. நட்டா தனது பதிவில் சாடியுள்ளார்.

Read Previous

ஆக.22-ல் திமுக தலைமை செயற்குழு கூட்டம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Read Next

“தமிழக நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை” – கமல்ஹாசன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular