டாஸ்மாக் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு!

 

 

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

 

இந்த முறைகேடு தொடர்பாக, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது 2026 ஜூலை இறுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் முறைகேடு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரமேஷ், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் தற்போது ஒத்திவைத்துள்ளது.

Read Previous

“எம்.ஜி.ஆரின் ஆவி சும்மா விடாது” – பொன்னையன் கடும் விமர்சனம்!

Read Next

“அமுதன் கொலை அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி” – கிருஷ்ணசாமி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular