ஆக.15 அல்ல.. ஆக.16-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பீகார் கிராம மக்கள்!

 

 

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பீகார் மாநிலத்தின் டும்ரான் பகுதி மக்கள் மட்டும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16-ம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.

 

இதற்கு பின்னால் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவம் ஒன்று உள்ளது. கடந்த 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, காவல் நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக மக்கள் பேரணியாக சென்றுள்ளனர்.

 

அப்போது பேரணியை தடுத்து நிறுத்திய ஆங்கிலேய காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16-ம் தேதி அப்பகுதி மக்கள் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

 

நாடு சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு அடுத்த நாளில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக இந்தப் பகுதியில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வு இன்றும் தொடர்வது வரலாற்றில் தனித்துவமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Read Previous

வெறும் வயிற்றில் முருங்கைக் கீரை சாப்பிடலாமா? உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

Read Next

மலைப்பகுதி கிராமங்களுக்கு டிரோனில் அஞ்சல்! அசாம், இமாச்சலில் 150 வழித்தடங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular