தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் மத்திய அரசு நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை மாற்றுவது தேவையற்றது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆக.15) செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார் என கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமையுமா, பொதுமக்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தற்போது அந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், அரசு தனது வாக்குறுதிகளை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.




