முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து சட்டரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நயினார் நாகேந்திரன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நயினார் நாகேந்திரனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், கைது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




