அப்பாவைப் போலவே போலீஸ் சீருடையில் 4 மாத குழந்தை! வைரலாகும் நெகிழ்ச்சி புகைப்படம்!

 

 

வேலூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தனது 4 மாத கைக்குழந்தைக்கு காவல்துறை சீருடை அணிவித்து ஏஎஸ்பி தனுஷ்குமார் அழைத்து வந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏஎஸ்பி தனுஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பங்கேற்றார்.

 

அப்போது, தன்னைப் போலவே குழந்தைக்கும் காவல்துறை சீருடை அணிவித்து அழைத்து வந்திருந்தார். விழாவில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அப்பாவின் பணியின் மீதான பெருமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த அழகான தருணத்தை பலரும் ரசித்து, வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு? நயினார் நாகேந்திரன் மீது புகார்; கைது செய்ய திட்டமா?

Read Next

“நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் தேய்ந்து வருகிறது!” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular