கர்நாடகாவில் உயிரிழந்த மூன்று தமிழர்கள் விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
“மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும், எந்த அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகங்களை கருத்தில் கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவர்களுக்கு நீதி கிடைக்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




