கோவை மாணவன் அமுதன் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில், போதைப்பொருள் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஆட்சியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜாபர் சாதிக்குடன் அப்போதைய முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் இருந்ததாகவும், அவர் மீது தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தவெக அமைச்சர் ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து நடவடிக்கை எடுத்தீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
இதனால் சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே பரபரப்பான விவாதம் நடைபெற்றது.




