தெலுங்கானாவில் போனாலு பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மாணவி ஷ்ரவாணி, தனது பெற்றோர் சுரேஷ் மற்றும் உமாராணியுடன் புதிய இருசக்கர வாகனத்தில் சொந்தூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
கட்கேசர் பகுதியில் உள்ள வந்தனா ஹோட்டல் அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் ஷ்ரவாணி லாரியின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற பெற்றோர் இருவரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த கட்கேசர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காயமடைந்த சுரேஷ் மற்றும் உமாராணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.




