காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூசாரி உயிரிழப்பு!

 

 

மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மேல அனுப்பானடியைச் சேர்ந்த பூசாரி பரமசிவம், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், பரமசிவத்தின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூலை 18ஆம் தேதி போலீசார் தாக்கியதன் காரணமாகவே தனது கணவர் உயிரிழந்ததாக அவரது மனைவி அய்யம்மாள் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

இந்தக் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Read Previous

ONGC-யில் 24 மருத்துவ அதிகாரி பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

Read Next

சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்.. மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அத்துமீறல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular