நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் அருகே கல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பேப்பர் மில்லில் இன்று மதியம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கழிவு பேப்பர்கள் பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பேப்பர்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




