சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 19) பேசிய அமைச்சர் ஆனந்த், “சர்கார் பட பேனரைக் கிழித்ததால் அதிமுக ஆட்சி கவிழ்ந்தது” என விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எங்கள் தலைவர்களைப் பழித்துப் பேசினால் கழகத் தொண்டன் வீறுகொண்டு எழுவான். உங்கள் பழைய உருட்டுகளை தியேட்டர் வாசலோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் வெளியான இந்தப் பதில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




