பீகாரில் அரசுப் பள்ளி ஒன்றில் மதிய உணவு தயாரிக்கும் போது, உப்புக்கு பதிலாக தவறுதலாக சலவைத்தூள் சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உணவை சாப்பிட்ட 36 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சமையல் பணியில் ஈடுபட்டிருந்த 3 சமையல்காரர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.




