“அம்பேத்கர் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படவில்லை” – அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

 

 

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

 

மலேசியாவில் கல்வி பயின்று வரும் மாணவர் ஒருவருக்கு வழங்க வேண்டிய ரூ.48 லட்சம் உதவித்தொகையும் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்களுக்கு நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் எந்தவித தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே, உதவித்தொகை தொடர்பாக வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பொதுமக்களும் மாணவர்களும் நம்ப வேண்டாம் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Read Previous

மதிய உணவில் உப்புக்கு பதில் சலவைத்தூள்! 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

Read Next

சவுதி தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர் உடல் எப்போது வரும்? – சட்டப்பேரவையில் கோரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular