செல்போன் உற்பத்திக்கு ரூ.62,500 கோடி திட்டம்! 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு!

 

 

இந்தியாவில் செல்போன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், ரூ.62,500 கோடி மதிப்பிலான புதிய உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டில் சுமார் ரூ.39 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும், செல்போன் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், சுமார் 60 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

 

இந்தத் திட்டம் இந்தியாவை உலகளாவிய செல்போன் உற்பத்தி மையமாக மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Read Previous

அரசு பேருந்தில் பயணி தற்கொலை! நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!

Read Next

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular