டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஆக.22) சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
இந்த முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்று செந்தில் பாலாஜி இன்று ஆஜராகியுள்ளார்.
அவரிடம் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




