கோயில் மலைப்பாதையில் திடீர் மாரடைப்பு: பக்தர் உயிரிழப்பு!

 

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ரங்கமலை மல்லீஸ்வரர் கோயிலுக்கு நண்பர்களுடன் சென்ற சுதாகர், சாமி தரிசனம் முடித்துவிட்டு மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

 

அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

மலைப்பகுதியில் அவரது உடலை கீழே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், டோலி மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி உடலை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர்.

 

கோயிலுக்கு சென்ற பக்தர் மலைப்பாதையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

“லிவ்-இன் உறவு திருமணத்திற்கு நிகரானது” – டெல்லி உயர் நீதிமன்றம்!

Read Next

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பில் இருந்து இஸ்ரோ விலகுகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular