ராக்கெட்டுகள் மற்றும் வழக்கமான செயற்கைக்கோள்களின் உற்பத்தியை படிப்படியாக தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்க இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனமான எஸ்.எஸ்.எல்.வி. உற்பத்தியில் இந்த மாற்றம் தொடங்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக பி.எஸ்.எல்.வி., எல்.வி.எம்.3 உள்ளிட்ட ராக்கெட்டுகளின் தயாரிப்பையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இஸ்ரோ தனது முக்கிய கவனத்தை ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால விண்வெளித் திட்டங்களில் செலுத்தும் வகையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




