தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் வாழை இலை விலை திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளது.
வாழை இலை வரத்து குறைந்துள்ள நிலையில், முகூர்த்த நாட்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு வாழை இலை, தற்போது ரூ.5,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு வாழை இலை ரூ.30 வரை விற்கப்படுகிறது.
திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




