சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கட்கிழமை நள்ளிரவில் அதிவேகமாக சென்ற பைக், எதிர்திசையில் வந்த மற்றொரு பைக்குடன் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சித்திக் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு முக்கிய காரணம் அதிவேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




