சென்னையில் மின்தேவையை சமாளிக்க 21 புதிய துணை மின்நிலையங்கள்!

 

 

சென்னையில் அதிகரித்து வரும் மின்சார தேவையை கருத்தில் கொண்டு, மின்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (செப்.2) பேசிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் 6 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், அடுத்த 4 ஆண்டுகளில் மேலும் 15 துணை மின்நிலையங்கள் படிப்படியாக நிறுவப்படும் என்றும் கூறினார். இதனிடையே, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மின்சார ஜங்க்ஷன் பெட்டிகளை பாதுகாப்பான உயரத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Read Previous

பேருந்தில் இருந்து மாணவிகள் கீழே தள்ளப்பட்டதாக புகார்!

Read Next

மாமல்லன் நீர்த்தேக்க திட்டப் பணிகள் நிறுத்தம்? சென்னையின் குடிநீர் ஆதாரம் குறித்து கவலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular