திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை..!!
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (ஜூலை 19) 90,956 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.4.05 கோடி வசூலாகியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், 33,046 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதுடன், 4.44 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன.




