மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை முன்னிட்டு, ஈரானுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஈரானில் தற்போது தங்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பு நிலையை தொடர்ந்து கண்காணித்து, அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சூழ்நிலைக்கு ஏற்ப நாடு திரும்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால், இந்திய தூதரகத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.




