கயானாவில் பயணிகள் கப்பல் விபத்து: 67 பேர் மீட்பு, 66 பேரை தேடும் பணி தீவிரம்..!!

 

 

தென் அமெரிக்க நாடான கயானாவில், தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து பரிமா–வைனி பகுதிக்கு 133 பயணிகளுடன் சென்ற சிறிய ரக பயணிகள் கப்பல் நடுக்கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 67 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

 

கப்பலில் இருந்ததாகக் கூறப்படும் மற்ற 66 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடலில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

 

கப்பல் விபத்துக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவினாலும், அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

Read Previous

பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?.. அறிவியல் என்ன சொல்கிறது?..

Read Next

திரிபுரா டிஜிபி அனுராக் தன்கர் மரணம்: உயர்மட்ட விசாரணை தீவிரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular