மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றமும், அதிகார மாற்றமும் வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அதை 1994-ஆம் ஆண்டு வைகோ முயற்சி செய்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. தற்போது அவர் எங்கள் தலைவர் விஜயின் காலடியில் வந்து விழுந்துவிட்டார்” என்று கூறினார்.
இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு மதிமுக அல்லது வைகோ தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.




