
ஐபிஎல் ஆரம்பித்து அனைத்து அணிகளும் பாதி போட்டிகளை விளையாடி முடிக்கின்ற தருவாயில் இருக்கின்றது. இந்த நேரத்தில் பல அணிகள் முதல் நான்கு இடத்திற்கு போட்டி போட்டு வருகின்றது. ஒரு சில அணிகள் பரிதாபமாக கடைசி இடங்களில் இருக்கின்றது. ஆனால் அடுத்து வரப்போகும் போட்டிகளில் என்ன வேணுமானாலும் நடக்கலாம். யார் வேண்டுமானாலும் முதல் நான்கு இடத்தை பிடிக்கலாம் என்ற சூழ்நிலை அமைந்துள்ளது. அந்த வகையில் நேற்று சென்னை அணிக்கும் லக்னோ அணிக்கும் லக்னோவில் போட்டி நடந்து முடிந்தது.
இந்த போட்டிக்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் தான் வெற்றி பெற்றிருந்தது. ஆகையால் மகேந்திர சிங் தோனி தலைமையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று பலர் நம்பிக்கை வைத்திருந்தனர். டாஸ் வென்ற எம் எஸ் தோனி முதலில் பவுலிங் செய்வதாக முடிவு செய்தார். ரசிகர்கள் பெரிதும் கேட்டு வந்த செய்க் ரசீத் போட்டியில் இடம்பெற்றார்.
முதலில் பேட்டிங் ஆடியோ லக்னோ அணி சுமாராகவே ஆடியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர்கள் அவ்வப்போது விக்கெட்டுகளை எடுத்து லக்னோவை பந்தாடினர். எப்போதும் இல்லாத வகையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர். இதனால் லக்னோ 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து பேட்டிங் ஆட களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாகவே தொடங்கினர். ஆனால் ஆறு ஓவர்களுக்கு பிறகு அவர்களின் ஆட்டம் பொறுமையாகிவிட்டது. இறுதி வரை சென்ற போட்டியில் சிவம் தூபே மற்றும் தோனியின் பங்களிப்பு வெற்றிக்கு வழி வகுத்தது. வெகு நாட்களுக்கு பிறகு மகேந்திர சிங் தோனி அவர்கள் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தனது கீப்பிங்கிலும் கேப்டன்ஷிப்பிலும் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.