ஊழியர்களின் PF தொகையை விரைவாகப் பெறும் வகையில், EPFO 3.0 திட்டத்தின் கீழ் புதிய டிஜிட்டல் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மத்திய தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இணைந்து உருவாக்கி வரும் இந்த வசதியில், PF பணத்தை UPI மற்றும் ATM போன்ற வழிகளின் மூலம் எளிதாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேவையான டிஜிட்டல் தரவுத்தளங்கள் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய வசதி செப்டம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




