SBI வங்கியில் பர்சனல் லோன் பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பர்சனல் லோன்:
அன்றாட வாழ்க்கையில் மக்களின் முக்கிய தேவையாக இருப்பது பணம். அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் பணம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அத்தகைய பணம் பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் மக்கள் கடன் வாங்க முனைகிறார்கள். சிலர் தங்கள் வாங்கும் பொருட்களை கடனில் வாங்கி மாதந்தோறும் EMI செலுத்தி வருகின்றனர். மக்களின் தேவைக்கேற்ப வீட்டு கடன், தனிநபர் கடன், கல்விக் கடன் என பல விதங்களில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
SBI வங்கியில் 21 வயது முதல் 58 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பர்சனல் லோன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த லோன் பெற விரும்புபவர்கள் அரசு பணியில் அல்லது தனியார் பணியில் அல்லது சுயமாக தொழில் செய்பவராக இருக்க வேண்டும். ரூ.15,000/- மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ரூ.8 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், முகவரி சான்று, சம்பளம் பெறும் ரசீது, பாம் 16, ஐ டி ரிட்டன்ஸ் மற்றும் அவருடைய ஆறு மாத கால சம்பள விவரம் ஆகியவற்றை சமர்ப்பிப்பதன் மூலம் லோன் பெற்றுக்கொள்ள முடியும்.