
நாம் வெயிலில் அலைவதன் காரணமாகவோ அல்லது அதிக நேரம் கண் முழித்திருந்தாலோ அல்லது கண்களுக்கு அதிக வெளிச்சங்களை தருவதால் தலைவலி எடுப்பது இயல்பு, அப்படி இருக்கும் பட்சத்தில் தலைக்கு அடிக்கடி தைலங்கள் தேய்ப்பதனால் கண்ணின் வெளிச்சம் குறைந்து கண்களில் பார்வை குறைபாடு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
தலையணைக்கு அருகே தைலத்தை வைத்து தூங்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு அடிக்கடி அவர்கள் தைலத்தை எடுத்து தலையில் தேய்த்து கொண்டே இருப்பதும் வழக்கம், மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி இரும்பல் தலைவலி ஏற்பட்டால் நாம் தேடுவதும் தைலத்தை தான் தைலத்தை எடுத்து நன்றாக தேய்ப்பதன் மூலம் சரியாகிவிடும் என்ற எல்லோருக்குள்ளும் எண்ணங்கள் உண்டு, நாம் அன்றாட பயன்படுத்தப்படும் தைலத்தினால் நமது பார்வை பறிபோகும் என்று யாரும் அறிவதில்லை, அடிக்கடி நாம் தைலம் தேய்த்து வருவதனால் கண்களுக்கு வறட்சித் தன்மையும் எரிச்சலும் ஏற்படுகிறது இதனால் கண்கள் பலவீனம் அடைந்து கண் பார்வை மங்கி கண் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் தைலம் தேய்ப்பதனை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அல்லது அதனை மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!