இன்றைய தலைமுறையில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்கள் யாருமே இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் சமூக வலையதலத்தில் தங்களின் புகைப்படங்கள் வீடியோக்களை ரிலீஸ் ஆகவும் ஸ்டேட்டஸ் ஆகவும் வைப்பது வழக்கமாக இருக்கிறது, தொடர்ந்து மற்றவரின் புகைப்படத்தை வைப்பதனால் கடும் தண்டனை விதி கூடும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது..
சமூக வலைதளங்களில் அடுத்தவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தினால் கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் சிறையில் அடைக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர், அடுத்தவர் புகைப்படங்களை பயன்படுத்தி பணம் பறிப்பது மோசடி செயலில் ஈடுபடுவது தொடர் கதையாகி வரும் சூழ்நிலையில் தனிநபரின் படத்தை அனுமதியின்றி பயன்படுத்தினால் மூன்று ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் மூன்று லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது, புகார் அளிக்க விரும்புவோர் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர், மேலும் இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்..!!