
ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு IPL தொடரின் மெகா ஏலத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதிலிருந்து ஆரம்பித்துவிட்டது. லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அதாவது அடுத்த ஆண்டு IPL தொடரில் கே எல் ராகுல் டிரேடிங் முறை மூலம் RCB அணிக்கு செல்ல உள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் டூபிளிசிக்கு பதிலாக புதிய கேப்டனாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2013, 2016 சீசன்களில் பெங்களூர் அணிக்காக கே.எல்.ராகுல் விளையாடி உள்ளார். எதிர்வரும் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைக்கவும், 1 வீரருக்கு ரைட் டூ மேட்ச் கார்டு பயன்படுத்தவும் பிசிசிஐ அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.