தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணத்தால் இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் பரவலான மழையும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய உள்ளது இதை தொடர்ந்து தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டும் மேலும் நெல்லை கன்னியாகுமரி தென்காசி, தேனி திண்டுக்கல் திருப்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்டும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது, மேலும் கடலோரம் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்க தமிழக வானிலை மையம் எச்சரித்துள்ளது.