அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியது “அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்பதே கிடையாது. திமுக ஆட்சியில் தான் முதன் முதலில் கள்ளச்சாராயம் புழக்கத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜி தான் கள்ளச்சாராயம் விற்பனைக்கு மூல காரணமாக அமைந்தார் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக உள்ளனர்.
மணிப்பூர் கலவரத்தின் போது பிரதமர் மோடி ஏன் மணிப்பூருக்கு நேரில் செல்லவில்லை..? என்று ராகுல் காந்தி கேட்டார். அவர் ஏன் இப்போது கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் போகவில்லை என்று கேட்கவில்லையே..? சட்டசபையில் அதிமுகவினர் இருந்திருந்தால் கள்ளச்சாரை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவும் என்று அறிந்து தான் அதிமுகவை அவையை விட்டு வெளியேற்றி வெறும் கையால் முதல்வர் கம்பு சுற்றி கொண்டுள்ளார்.
அதிமுகவிற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி தரவில்லை. இந்த சம்பவம் குறித்து அவை விதியின் 56 இன் படி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேச அனுமதி தரவில்லை. ஆனால் முதல்வர் மட்டும் இதே விதி 56 இன் கீழ் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ளார். இது எப்படி சாத்தியம்..? ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டமா..? சட்டசபையில் கண்ணியம் காக்கும் விதமாக நாங்கள் அமைதியாக வெளியேறினோம். சட்டையை கிழிந்து கொண்டு வெளியேறவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான கொள்முதல் ஊழலில் முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட தொடர்புடைய அனைவரும் மீதும் சட்டம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”, என அவர் கூறியுள்ளார்.