ஆந்திர மாநிலத்தில் தனியார் கல்லூரியில் படிக்கும் பெண் பிரணவ். இவர் தன்னுடன் பழகிவந்த கர்னூலை சேர்ந்த மாணவி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து கஞ்சா கலந்த பிரியாணியை கொடுத்துள்ளார். அடிக்கடி சாப்பிட்டதால் அந்த பிரியாணிக்கு அடிமையான அந்த மாணவியை தனது கணவரை வைத்து பலாத்காரம் செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் மாணவியின் பெற்றோருக்கு வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அளித்த புகாரில் தம்பதியை கைது செய்து விசாரித்ததில் இது போன்று சில பெண்களை அவர்கள் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.




