
போக்குவரத்து சாலைகளில் நொடிக்கு ஒரு விபத்து நடந்து கொண்டுதான் வருகிறது. போக்குவரத்து காவல்துறையினரும் விபத்துகள் நடக்காமல் இருக்க பல முயற்சிகள் எடுக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி சில விபத்துகள் நடந்துகொண்டிருக்கிறது.. இதற்கு பொதுமக்களின் அவசரத் தன்மையே காரணமாகும் . வாகன ஓட்டுநர்கள் பொறுமையாக வாகனத்தை ஓட்டிச்சென்றால் எந்தவிதமான விபத்துக்களும் நிகழ வாய்ப்பிருக்காது. இந்நிலையில் 16 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி மெட்ரோ ரயில் மேம்பாலம் அருகே நடந்த கோர சம்பவம் அங்குள்ள மக்களை பதற வைத்துள்ளது. சுகனேஸ்வரர் எனும் 16 வயது பள்ளி மாணவன் தன் நண்பர்களை பார்க்க வேண்டும் என்று தன் பெற்றோரிடம் கூறி வீட்டில் இருக்கும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளான். அப்போது அதிக வேகத்தில் போனதால் கட்டுப்பாட்டை இழந்து முன்னே செல்லும் லாரி மீது மோதியதில் பரிதமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.