
4 வயதில் : என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.
5 வயதில் : என் அப்பாவுக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.
8 வயதில்: என் அப்பாவுக்கு ஓரளவு தெரியும்.
15 வயதில்: ஓ, என் அப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது.
18 வயதில்: என் அப்பாவைப் பற்றி கவலைப்படாதே. அவர் அந்த காலத்து மனிதர்.
21 வயதில்: அவரா? எனக்குத் தெரியாது. அவருகிட்ட நான் அவ்வளவா வச்சிக்கறதில்லை.
26 வயதில்: இது என்னோட முடிவு. அவருகிட்ட கேக்கணும்னு அவசியம் இல்ல.
35 வயதில் : நான் அப்பா சொல்றத கொஞ்சம் கேட்டு இருக்கணும்.
40 வயதில் : அப்பா இதை எப்படி கையாண்டிருப்பார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
50 வயதில் : என்னோட அப்பாவுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு. ஆனா நான் புரிஞ்சிக்கல.
60 வயதில் : என்னோட அப்பா ஹீரோ தான்.
அப்பா இறந்த பிறகு : அவரது அறிவை நான் மதிக்கவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருடன் நான் இன்னும் நேரம் செலவளித்திருக்க வேண்டும் என்பது வருத்தமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அவரை நான் சந்தோசமாக வைத்திருத்திருக்க வேண்டும் என்று இப்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்க முடியும். தவற விட்டு விட்டேன்.
அப்பாவுடன் நீங்கள் ஒரு முறை மட்டுமே வாழ்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் அப்பாவுக்கு கொடுக்கும் மரியாதைதான் உங்களுக்கு இந்த சமுதாயத்திலும், உறவுகளிடத்திலும் கிடைக்கும்.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..