அரசுப் பள்ளியில் இன்று நடந்த ஆன்மீக சொற்பொழிவாற்றில் மகாவிஷ்ணு பேசிய சொற்பொழிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி மாற்று திறனாளிகளை புண்படுத்தும் நிலையில் பேசி உள்ளதாக சர்ச்சை எழும்பிய நிலையில் தமிழக அரசு உடனடியாக உத்தரவு விட்டுள்ளது…
சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, கர்மா, பாவம் புண்ணியம், குருகுல கல்வி, மற்றும் மறு ஜென்மம் போன்ற அறிவியலுக்கு புறம்பான சொற்பொழிவுகள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது, இந்த பிற்போக்கான பேச்சை மாற்று திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்த்து கேட்டதைக் கொண்டு மகாவிஷ்ணு அந்த மாற்றத்தினால் ஆசிரியரிடம் தேவையில்லாத வாதத்தில் ஈடுபட்டுள்ளார், இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது, இதற்கு மேல் அரசு பள்ளியில் ஏதாவது நிகழ்ச்சிகள் விழாக்கள் நடத்த வேண்டும் என்றால் தமிழக அரசிடம் கூற வேண்டும் என்றும் தமிழக அரசு நடத்த சொல்லும் விழாக்களை மட்டும் சிறப்புக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார், மேலும் மீறினால் தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்..!!