
அன்றைய காலகட்டங்களில் அரசு பள்ளிகள் தான் ஆரம்ப பள்ளியாகவும் மாணவர்களுக்கு அடித்தளமிட்ட பள்ளியாகவும் இருந்து வந்தது அப்படி இருக்கையில் இன்றைய காலகட்டங்களில் அரசு பள்ளிகள் இருந்தும் மாணவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது, இதனை கண்டித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார், மற்ற பள்ளி ஆசிரியர்களிடம் நமது அரசு பள்ளியில் என்ன அடிப்படை வசதிகள் இல்லாமல் போயிற்று அனைத்தும் தருகிறோம் ஆனால் இன்று வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெற்றோர்கள் கூட தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர் இதற்கு என்னதான் காரணம் அரசு பள்ளி ஆசிரியரின் மெத்தனமான பேச்சுகளா இல்லை அசால்ட்டான கல்வி கற்க்கும் திறனா என்னதான் காரணம் அரசு பள்ளிகள் இருக்க தனியார் பள்ளியை நோக்கி ஓடுகிறது பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளும் வருகிற ஆண்டில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார் ஆசிரியர்களிடம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள்..!!