
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் மகாராஜா. பெரிய எதிர்பார்ப்பில் பல தடைகளை உடைத்து ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருவது மட்டுமன்றி நல்ல வசூலையும் அள்ளி வருகிறது.
இந்த நிலையில், இத்திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.100 கோடிக்கும் (இந்தியா 76 கோடி,வெளிநாடுகளில் 24 கோடி) மேல் வசூல் செய்துள்ளதாக BOX OFFICE வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது அரண்மனை-4 படத்தின் தமிழக வசூலையும் முறியடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.