
அருணா கயிறு ஏன் கட்டுகிறோம் என்று தெரியுமா?
அரைஞாண் கயிறு குடலிறக்கம் (ஹெர்ணியா) வராமல் தடுக்கும்.
வயதில் பெரியவர்கள் உள்ள இல்லங்களில், அவர்கள் இன்றைக்கும் தங்களின் பேரக்குழந்தைகளுக்கும் பேத்திகளுக்கும் வெள்ளை எருக்கம் நார் – அரைஞாண் கயிறைக் கட்டி விடுவார்கள். அதற்குக் காரணம் கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பானது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதன் இதயத் துடிப்பை சீராக்க உதவுவது எது தெரியுமா? குழந்தையின் இடுப்பில் கட்டப்படும் அரைஞாண் கயிறு என்கிறார்கள் முன்னோர்கள். ஒரு சிலர் சாஸ்திரப்படி குழந்தை பிறந்த ஏழாம் நாளில் இடுப்பில் அரைஞாண் கயிரை அணிவிப்பார்கள்.
இடுப்புக்குஅருகில் மட்டுமே ரத்தக் குழாய்கள் மெலிதாக இருக்கும். அதேபோல் தோலின் மிக அருகில் செல்கின்றன. எனவே ஈரம் பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாகத் திரித்து, அதையே குழந்தைகளின் இடுப்பில் கட்டிவிடுவார்கள்.ஆனால், நம் முன்னோர்கள், அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, காத்துக்கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்று கூறினர் முன்னோர்கள். சிலரோ கறுப்பு பாசியை கோர்த்த கயிறு கட்டுவார்கள். சிலரோ சிவப்பு நிற கயிறுடன் பாசி கோர்த்து இடுப்பில் கட்டுவார்கள்.