பொதுவாக நம்மில் பலர் ஆசன வாய் அரிப்பு பிரச்சினையால் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
அந்த வகையில், இந்த இடங்களில் அரிப்பு ஏற்படும் என்பது மிக மோசமான உணர்வாகும். அரிக்கிறது என சொறிந்தால் நோயை இன்னும் தீவிரப்படுத்தும்.
இந்த பிரச்சினைக்களை சரியாக கண்டறிந்தால் மாத்திரமே உடனடியாக தீர்க்க முடியும். இல்லாவிட்டால் அரிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வேறு வேறு நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கின்றது.
சிலரின் அன்றாட உணவு பழக்க வழக்கங்கள் மோசமாக இருக்கும் பட்சத்தில் இந்த அரிப்பை தூண்டலாம்.
இது போன்று ஆசன வாயில் அரிப்பு ஏற்பட வேறு என்னென்ன காரணங்கள் இருக்கின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஆசன வாயில் அரிப்பு உண்டாக காரணம்:
1. மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் மலம் கழித்த பின்னர் அந்த வாய்ப்பகுதி அரிப்பு, வலி ஏற்படும். இது போன்ற நேரங்களில் டாய்லெட் பேப்பரால் சுத்தம் செய்வது சிறந்தது. அத்துடன் அதிகம் நார்ச்சத்து கொண்ட பழங்கள், காய்கறிகளை எடுத்து கொள்வது இன்னும் சிறந்தது.
2. மலம் கழித்த பின்னர் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் டாய்லெட் பேப்பரால் சுத்தம் செய்வது அவசியம்.
3. ஆசன வாய்ப்பகுதியில் அதிகமான சோப்பு, வெந்நீர், மருந்துபொடிகள், வாசனை திரவியங்கள் அல்லது டியோடரண்டுகளை பயன்படுத்த வேண்டாம். இது போன்ற பயன்பாடுகள் எண்ணெய் சுரப்பில் தடையை ஏற்படுத்தி உணர்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
4. அளவிற்கு அதிகமாக காஃபி குடிக்கும் பொழுது மலம் கழித்த பின்னர் அந்த இடங்களில் அரிப்பு அல்லது எறிச்சல் ஏற்படும். ஏனெனின் காஃபி அதிகமாக குடிக்கும் பொழுது நமைச்சல் துண்டப்படும்.
5. உள்ளாடைகள் அணியும் போது இறுக்கமாக அணிவதை தவிர்க்கவும். அத்துடன் உள்ளாடைகள் அணியும் பொழுது சுத்தமான காட்டன் துணியால் செய்யப்பட்ட துணிகளை பயன்படுத்தவும்.
6. மலக்குடல் அல்லது ஆசனவாயில் வீங்கிய நரம்புகள் ஆசன வாயில் அரிப்பை ஏற்படுத்தலாம். இந்த பிரச்சினை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக இருக்கும். இந்த பிரச்சினை அதிகரிக்கும் பட்சத்தில் உரிய மருத்துவரை பார்ப்பது சிறந்தது.