ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை..!
முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாச, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 04ம் தேதி ஞாயிறுக்கிழமை, நாளை வருகிறது.
பின்வரும் விடயங்கள் செய்யாது இருத்தல் வேண்டும்:
🛑ஆடி அமாவாசை அன்று நீங்கள் பிறரிடம் கடன் வாங்கவும் கூடாது, நீங்கள் பிறருக்கு கொடுக்கவும் கூடாது.
🛑பணம் மட்டுமின்றி வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுக்க கூடாது.
🛑ஆடி முதல் அமாவாசை அன்று வாசலிலும் பூஜை அறைகளிலும் கோலம் இடுதல் கூடாது.
🛑வாசலில் தண்ணீர் மட்டும் தெளித்து பெருக்கி விட வேண்டும். மறந்தும் கூட வாசலில் கோலமிடுதல் கூடாது.
🛑ஆடி அமாவசை அன்று, நீங்கள் உங்கள் முன்னனோர்களை வணங்கி படையல் வைக்காமல் இருந்தாலும், கட்டாயமாக காகத்திற்கு உங்கள் வீட்டில் சமைத்த உணவுகளை எச்சில் படாமல் வைக்க வேண்டும்.
🛑மேலும், அமாவாசை அன்று தலைமுடி வெட்டுதல், நகம் வெட்டுதல் போன்ற செயல்களை செய்ய கூடாது.
🛑முக்கியமாக, அமாவாசை அன்று வீட்டில் அசைவ உணவுகளை சமைக்கவும் கூடாது, உண்ணவும் கூடாது. ஏனென்றால், முன்னோர்களை வழிபாடும் நாளான அமாவாசை அன்று அசைவ உணவுகளை சமைக்க கூடாது என்பது ஐதீகம்.
🛑ஆடி அமாவாசை அன்று, காலையில் வீட்டையோ, சமையல் அறையையே அல்லது பூஜை அறையையோ சுத்தம் செய்ய கூடாது.
🛑காலையில் நீண்ட நேரம் தூங்க கூடாது.
🛑முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.
🛑வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது.
🛑காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.
🛑முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.
🛑பெண்கள் தலைவிரி கோலத்துடன் இருக்க கூடாது. நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.
🛑பெண்கள் குளித்து விட்டு தான் சமைக்க தொடங்க வேண்டும்.
🛑அதுமட்டுமில்லாமல், புடவை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து சமைக்கவும், மற்றும் விளக்கேற்றல் செய்ய வேண்டும்.