ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அன்பாக நடத்தி பாருங்கள்.. அவர்கள் உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்..!!

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் நாளைக்கு மறுநாள் படையல் அதுக்கு மறுநாள் நம்மளை மறந்துடுவாங்க…

அவ்வளவுதான் வாழ்க்கை..

 

அன்பா பேசுங்க ஆறுதலாக இருங்க

இன்று ஆணும் பெண்ணும் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டோம்.

 

கணவனுக்கு வேலை செய்யும் இடத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், சரி வீட்டுக்கு போனால் எல்லாம் சரியாகிவிடும் ரிலாக்ஸா இருக்கலாம் என்று வருவார்கள். வந்தவுடனே ஏங்க மாளிகை சாமான் எல்லாம் காலியா போச்சு பணம் கொடுங்க வாங்கணும் நாளைக்கு ஒரு வளைகாப்பு இருக்கு அங்க போகணும் அப்படி சொல்லி அவர்களை மேலும் கொஞ்சம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் பெண்கள்.

 

#கணவன் வேலைக்கு போயிட்டு வந்த உடனே ஒரு டீ போட்டு கொடுத்து என்னங்க உடம்பு ஏதும் சரி இல்லையா?? மனசு சரியில்லையா ஏன் இப்படி இருக்கீங்க? அப்படின்னு சொல்லி பக்கத்துல உக்காந்து பே நாலு வார்த்தை ஆறுதலாகவும் அன்பாகவும் பேசுங்க

அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா எப்ப போல தான் சரி ஆயிடுச்சு அப்படின்னு சொல்லுவார்கள்…

 

அதேபோல #பெண்கள் வேலைக்கு போயிட்டு வந்த உடனே வேலையில் அவர்களுக்கு பல டென்ஷன் இருக்கும்

சரி வீட்டுக்கு போனா எல்லாம் சரியாகும். ரிலாக்ஸாக இருக்கலாம் என்று நினைத்து வருவார்கள் அப்போதுதான் எம்மா எனக்கு ஹோம் ஒர்க் சொல்லி கொடும்மா இன்று மகளோ மகனோ வருவார்கள்

அம்மா இப்பதான் வந்திருக்கேன் நீ அப்பாகிட்ட போய் கேளு அப்படி என்று சொல்வார்கள் அப்பா நீயே சொல்லிக் கொடு என்று மொபைல் போனில் மூழ்கி விடுவார்கள்..

 

வேலைக்கு போயிட்டு வரும் பெண்களிடம் கணவர்கள் என்னமா இன்னைக்கு வேலை ரொம்ப கஷ்டமா??

உடம்பு டயர்டா இருக்கா?? சரி நீ உட்காரு பாப்பாவுக்கு நான் ஹோம் ஒர்க் சொல்லி தரேன் நானே சமைக்கிறேன் அப்படின்னு

அன்பாகவும் ஆறுதலாகவும் சொல்லிப் பாருங்க இல்லங்க இது எப்பவும் போல தானுங்க நான் பாக்குறேன் அப்படின்னு சொல்லுவாங்க…

 

பெண்களுக்கு அந்த மூன்று நாட்களில்தான் ஓய்வு தேவை என்று நினைப்பார்கள் அப்போதுதான் பிள்ளைகள் அம்மா எனக்கு மேகி சமைச்சு குடுங்க அம்மா எனக்கு உப்புமா சமைச்சு கொடுங்க அம்மா என்று அடம்பிடிப்பார்கள். சின்ன குழந்தைகளை அடிக்கவும் முடியாது செஞ்சி தருவதற்கும் முடியாத சூழ்நிலையில் உட்கார்ந்திருப்பார்கள் வயிற்று வலியுடன்..

 

அந்த நேரத்தில் கணவர்கள் அன்பாகவும் ஆறுதலாகவும் ஒத்தாசையாகவும் இருக்க வேண்டும்.. தன் குழந்தைகளுக்கு அந்த மூன்று நாளைக்கு பற்றி சொல்லித் தர வேண்டும் அப்போதுதான் அவர்கள் முறை வரும்போது அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்..

 

ஆண்களும் சரி பெண்களும் சரி அதிகம் விரும்புவது அன்பான பேச்சும் ஆறுதலான வார்த்தைகளைத்தான் விரும்புவார்கள்.. வேலைக்கு போயிட்டு வரும் கணவரகள் வரும் வழியில் ஒரு முழம் மல்லிகை பூ வாங்கி தன் மனைவிக்கு அன்பாக கொடுங்கள் அதைவிட சந்தோசம் வேற என்ன வேண்டும் என்று நினைப்பார்கள்…

 

நீங்க ஒரு நாய்க்கு அன்பா ஒரு நாள் சோறு போடுங்க மறுநாள் உங்களை பார்த்து வாளாட்டி வரும்..

அந்த நாயை கம்பு எடுத்து அடிச்சா பக்கத்துல வருமா? வராது ஏன எல்லாமே ஒரு அன்புக்கு தான் …

 

யாராக இருந்தாலும் சரி அன்பா நாலு வார்த்தை ஆறுதலான நாலு வார்த்தை பேசிப் பாருங்க அதைவிட வேற எதுவும் வேண்டாம் என்று நினைப்பார்கள்…

 

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அன்பாக நடத்தி பாருங்கள் அவர்கள் உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்…….

Read Previous

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு கன்பார்ம்..!!

Read Next

காலம் கடந்தும் அழகிய காதல்.. அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular