உலகம் முழுவதும் அடிக்கடி விடுதி மற்றும் கடையில் உணவு சாப்பிட்டு பலி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் ஆந்திர மாநிலத்தில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட்ட மூன்று மாணவர்கள் பலி, சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது, அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் கிறிஸ்துவ அமைப்பின் விடுதியில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் 3 மாணவர்கள் உயிர் இழந்துள்ளார்கள்..!!