உலகமெங்கும் சூதாட்டம் வெகு விரைவாக பரவிக் கொண்டிருக்கிறது இது மொபைல் போன்களில் ஆன்லைன் ரம்மி என்று மற்றும் பலவிதமான பெயர்கள் சூடி சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சில நாட்களாக சூதாட்டத்தில் பணம் இழந்து அதிலேயே மூழ்கி எத்தனை பேர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று சென்னையை சேர்ந்த சாலிகிராமத்தில் உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி (51) இவர் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சம் இழந்து தற்கொலை செய்து கொண்டார் என்று விருகம்பாக்கம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது, இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேனேஜராக உள்ளார் என்றும் தெரியவந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டு காலமாக ரம்மி விளையாட்டில் சிக்கிக்கொண்டார் இதில் 15 லட்சம் வரை ரம்மியில் பணம் இழந்தது கண்டறியப்பட்டுள்ளது..!!