சில படங்களை எல்லாம் வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். மேலும், அதற்கான காரணத்தையும் பெரியோர்கள் கூறுவார்கள். அந்த வகையில் ஆமை படத்தை வீட்டில் வைக்கலாமா இல்லை கூடாதா என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இதை வீட்டில் சிலையாக வைப்பதால் அற்புதமான பயன்களை அடையலாம் என்று கூறப்படுகிறது. எனவே தாராளமாக நாம் ஆமை படத்தை வீட்டில் வைக்கலாம்.
இந்து மத நம்பிக்கையின்படி விலங்குகள், பறவைகள் போன்றவை அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் ஆமை சிலையை வைப்பதால் லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் நம் வீட்டிற்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதை வடக்கு திசையில் வைத்தால் மிகவும் மங்களகரமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி வீட்டில் ஆமை எந்திரம் வைப்பது சிறப்பான பலன்களை தரும் என்று கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாள் அன்று ஆமை எந்திரம் அமைப்பதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இது தவிர சுபநேரம் பார்த்தும் இதை வைக்கலாம். பிரதான நுழைவாயிலில் ஆமை படத்தை வைப்பதன் மூலம் நாம் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது நம் கண்கூட பார்க்கலாம். மேலும் இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி அமைதி நிலவும் என்றும் நம்பப்படுகிறது.




